Thursday 15 January 2015

Superstar's method of effective motivation




நீங்கள் தினமும் உடற்பயிற்ச்சி செய்யனம்னு நினைக்கறீங்க. ஆனால் செய்ய முடியல. தியானம் பண்ணனம்னு கண்ணை மூடரீங்க. ஆனால். மனத்தை ஒருமுகப்படுத்தி தியானம் செய்ய முடியவில்லை. உங்கள் அன்றாட வேலைகளையே மாணவர்கள் என்றால் படிப்பு, பெரியவர்கள் என்றால் உழைப்பு. கவனம் சிதராமல் உங்கள் வேலைகளை உங்களால் செய்ய முடிவதில்லை. சரி. மனத்தை ஒருமுகபபடுத்த என்ன வழி. மனோ தத்துவத்தில் PHD வாங்கிய திரு சூரியன் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டு உள்ள மிக சிறந்த வழிமுறைகளை பார்ப்போம்.

1]புத்தகத்தை நாம் அனைவருமே இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாக படிப்போம். அவ்வாறு இல்லாமல் வலதிலிருந்து இடது பக்கமாக முதலில் படித்து, பின்னர் இடமிருந்து வலமாக படியுங்கள்.


2]அதே போல் முதலில் நீங்கள் தலை கீழாக புத்தகம் படித்து, பின்னர் நேராக படியுங்கள். இவ்வாறு செய்வது, நீங்கள் வேகமாக படிக்கும் திறனை அதிகரிப்பதோடு உங்கள் மனப்பாடம் செய்யும் திறனையும் அதிகரிக்கும்.

3] உலகில் பெரும்பாலான மக்கள் வலது கையால் எழுதும் பழக்கம் உடையவர்கள். வலது கையால் எழுதுபவர்கள் இடது கையாலும், இடது கை பழக்கம் உடையவர்கள் வலது கையாலும் எழுதி பழகுங்கள்.

4] பின்னர் சிவாஜி த பாஸ் போல் இரண்டு கைகளாலும் எழுதி பழகுங்கள்.

5] இது அவர் சொல்லாதது. என் சொந்த முயற்ச்சியில் உணர்ந்தது. ஒரே நேரத்தில் வலது கையில் ஒரு வார்த்தையையும், இடது கையில் மற்றொரு வார்த்தையையும் எழுதி பழகுங்கள். வலது கையில் குளிர் என்று எழுதினால், இடது கையில் வெய்யில் என்று எழுதுங்கள்.

6] இதே போல் உங்களுக்கு ஏதேனும் புதிய வழிமுறை தோன்றினாலும் செய்யலாம். நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக, நேர்மறை எண்ணங்களை மனத்தில் வளர்க்கும் விதமாக தினமும் எந்த அளவு புது, புது விசயங்களை கற்க்கிரோமோ, கேட்கிறோமோ. அந்த அளவு மூளையில் புரத சக்த்து அதிகமாகும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் நீங்கள் எழுதும் பொழுது. வலது, இடது இரண்டு பக்க மூளையும் ஒரே நேரத்தில் இயங்கும். அதன் மூலம் உங்கள் IQ, EQ இரண்டும் உயரும். இந்த பயிற்ச்சி யார் வேண்டுமானாலும் செய்யலாம். அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு இந்த பயிற்ச்சி ஒரு வர பிரசாதம். வெறும் நாலே நாட்களில் எனது தம்பியின் அறிவாற்றலை மேம்படுத்திய பயிற்ச்சி இது.

உங்களுக்கு இது பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், மிகவும் பிடித்து இருந்தால் இதை share செய்யுங்கள்.

No comments:

Post a Comment