Friday 16 January 2015

ஒப்பிடுதல்:

மக்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் ஒப்பிடுவது வழக்கம். இந்த ஒப்பீடுகளால்தான் அவர்கள் மகழ்ச்சியாகவோ, துக்கமாகவோ இருக்கிறார்கள்.

புகழ் பெற்ற இந்து மகான் ஒருவரை நான் சந்தித்தேன். எனக்கும் அவருக்கும் இடையில் என்ன வேறுபாடு என்பதை அவர் சொன்னார்.

"துக்கப்படுகிறவர்களைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சியின் மர்மமே இருக்கிறது.
ஊனமானவனைப் பார்க்கும்போது, நீ ஊனமில்லாமல் இருப்பதற்காக மகிழ்வு தோன்றும்.
கண்ணற்றவனைப் பார்க்கும்போது, நீ அப்படி இல்லை என்பதில் மகிழ்ச்சி பிறக்கும்.
ஏழையைப் பார்த்தால் நாம் ஏழை இல்லை என்பதில் ஆனந்தம் தோன்றும்", என்றார் அவர்.
மேலே உளறாமல் இருக்க, நான் அவரைக் குறுக்கிட்டுத் தடுக்க வேண்டி வந்தது.

"உங்களுக்கு ஒரு சிறிய விஷயம் புரியவில்லை. ஒப்பிட ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லை.
பரிதாபத்திற்குரியவர்களோடு மட்டுமே ஒருவன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ள மாட்டான்.
தன்னை விட வலிமை படைத்தவனோடும், மதிப்பு மரியாதை கொண்டவனோடும் ஒப்பிட ஆரம்பிப்பான்.
அதனால், துக்கமே உண்டாகும். 

 தனக்கு கீழே உள்ளவர்களை பார்த்து மகிழ்ச்சி அடைதல் என்பது, அவர்களின் துன்பமான நிலமையை கண்டு நாம் மகிழ்ச்சி அடைவது தானே. அது ஒரு கேவலமான மனப்பான்மை. 

நீங்கள் ஆனந்த இரகசியத்தைச் சொல்லவில்லை.
துக்கத்தின் இரகசியத்தையே சொல்கிறீர்கள்!" என்றேன்.

ஆனால், இப்படித்தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்,
வெவ்வேறு வார்த்தைகளில். ஆனால், அடிப்படை என்னவோ ஒன்றுதான்.

எல்லா வேத நூல்களும் இதைத்தான் சொல்கின்றன.
மக்கள் துக்கப்படுகிறவர்களைப் பார்த்து நிறைவடைகிறார்கள்.

தாம் அப்படித் துன்பப் படவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள்.
இது ஒரு பக்கச் சார்புடையதாகத் தொடர்ந்து இருந்து வரக் கூடாது.
பிறரோடு உங்களை ஒப்பிட ஆரம்பிக்கும்போது
உங்களை விடத் தாழ்ந்தவர்களோடு மட்டுமல்லாமல்,
உயர்ந்தவர்களோடும் ஒப்பிடவே தோன்றும்.
மிஞ்சுவது நீங்காத கவலைதான்.
ஒப்பிடுதலே சரியில்லை.

நீங்கள் நீங்களேதான். வேறு யாரும் அல்ல.
ஒப்பற்றவர் நீங்கள்.
மற்றவரும் அப்படியே.
அதனால்தான், ஒப்பிடாதீர்கள்.
ஒப்பிடுவது உலகத்தோடு உங்களை விலங்கு மாட்டி விடுவது.
அது போட்டி பொறாமைகளை ஏற்படுத்திவிடுகிறது.
அது தனியாக வருவதில்லை.
துணையுடனே வருகிறது.
ஒப்பிடுவதற்கு முடிவே இல்லை.
ஆனால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள்!
அதை ஏற்றுக் கொள்வது,
வாழ்வின் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகும்.
--- ஓஷோ ---



3 comments: